நடிகை ஆச்சி மனோரமா உடல் தகனம்: மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்

By டி.செல்வகுமார்

1,500 படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்

*

'ஆச்சி' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் நடந்தது.

நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை என பன்முக நடிப்பால் பலரையும் கவர்ந்த மனோரமா, திரையுலகினரால் ‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். சென்னை தி.நகரில் வசித்து வந்த மனோரமா, கடந்த சில ஆண்டு களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்த சனிக்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து அவரது உடல், தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மனோரமா மறைவுச் செய்தி அறிந்த திரையுலகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே அவரது இல்லத்துக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், தனுஷ், சரத்குமார் மற்றும் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப் பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் திரண்டு வந்து மனோரமா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணிக்கு குடும்ப வழக்கப்படி மனோரமாவின் உடலுக்கு அவரது மகன் பூபதி, சடங்கு களை செய்தார். அதையடுத்து மனோரமாவின் உடல் மலர் களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டது.

மாலை 4.26 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலம் தெற்கு போக்சாலை, ஜி.என்.செட்டி சாலை, அண்ணா மேம்பாலம், ராதாகிருஷ்ணன் சாலைவழியாக மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் பின்புறம் உள்ள கைலாசபுரம் மயானத்தை சென்றடைந்தது. திரை யுலகினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். சாலையின் இருபுறமும் திரண் டிருந்த பொதுமக்கள், ஆச்சிக்கு பிரியா விடை கொடுத்தனர்.

கைலாசபுரம் மயானத்தை இறுதி ஊர்வலம் வந்தடைந்ததும் அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் இரவு 7 மணி அளவில் மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் பூபதி தீ மூட்டினார்.

‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறி முகமாகி, 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் (தற்போது திருவாரூர் மாவட்டம்), மன்னார்குடி அருகே உள்ள கிராமத்தில் 1937-ம் ஆண்டு பிறந்த மனோரமா, ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்தார். திரைப்படங்களில் சொந்தக் குரலில் 300-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார்.

அண்ணா, என்.டி.ராமாராவ், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என 5 முதல்வர் களுடன் நடித்த பெருமைக் குரியவர். நகைச்சுவை நடிகை யாக மட்டுமில்லாமல் சகோதரி, மனைவி, அம்மா, பாட்டி போன்ற குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 5 தலைமுறை நடிகர் களுடன் நடித்த பெருமையை பெற்றவர். பல்வேறு விருது களையும் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்