'தளபதி 65' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 64-வது படமாகும்.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். 'தளபதி 65' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் விலகிவிட்டார்.
தற்போது 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் பிஸியாக நாயகியாக இருப்பதால், 'தளபதி 65' படப்பிடிப்புத் தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக பூஜா ஹெக்டே தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால், 'தளபதி 65' படத்தின் மூலம் தமிழுக்கு பூஜா ஹெக்டே ரீ-என்ட்ரி கொடுப்பார் எனக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago