மீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் தமன்னா

By செய்திப்பிரிவு

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனுஷுக்கு நாயகியாக தமன்னா நடிக்கவுள்ளார்.

'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் செல்வராகவன். 'நானே வருவேன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதன் போட்டோ ஷூட் பணிகளை முடித்து, தற்போது தனுஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 2 நாயகிகள் நடிக்கவுள்ளார்கள். அதில் ஒருவராக தமன்னா நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 'படிக்காதவன்' மற்றும் 'வேங்கை' ஆகிய படங்களில் தனுஷுக்கு நாயகியாக தமன்னா நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் முதன்முறையாக தமன்னா நடிக்கவுள்ளார். மற்றொரு நாயகிக்கு சில முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படத்துக்குத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்