விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரசிகர்களுடன் 'மாஸ்டர்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார் விஜய்.
உலகமெங்கும் ஜனவரி 13-ம் தேதி வெளியான படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லலித் குமார் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு, திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதிக்க வேண்டி தமிழக முதல்வரைச் சந்தித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அனுமதி அளித்தது. இது கடும் விவாதத்துக்கு உள்ளானது. இந்தக் கரோனா அச்சுறுத்தல் காலத்தில் 100% இருக்கை அனுமதி என்பது கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தும். இப்படியான சூழலில் விஜய் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்ப்பாரா என்றெல்லாம் விமர்சித்து வந்தார்கள்.
தற்போது, சென்னையிலுள்ள தேவி திரையரங்கில் ரசிகர்களுடன் விஜய் 'மாஸ்டர்' படம் பார்த்துள்ளார். இதற்கான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், முகத்தை மூடி தொப்பி அணிந்து கொண்டு வருகிறார் விஜய். பின்பு, அங்குள்ள தேவி திரையரங்க நிர்வாகிகளிடம் கை கொடுத்துப் பேசிவிட்டு, உள்ளே செல்கிறார்.
» மீண்டும் கேப்டன் அமெரிக்காவாக நடிக்கிறேனா? க்றிஸ் ஈவன்ஸ்
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
இந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து விஜய் தரப்பில் விசாரித்தபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். ஏனென்றால், இந்த மாதிரி விஜய் படம் பார்க்க வெளியே வருவது குறித்து ரொம்ப நெருக்கமான நட்பு வட்டத்துக்கு மட்டும்தான் தெரியுமாம். இதேபோன்று காசி திரையரங்கில் 'கத்தி' படத்தை, அந்தப் படத்தின் உதவி இயக்குநர்களோடு விஜய் பார்த்து நினைவுகூரத்தக்கது.
தேவி திரையரங்க வீடியோ காட்சிகளை வைத்து, யாரெல்லாம் விஜய் வந்து ரசிகர்களோடு படம் பார்ப்பாரா என்று கேள்வி எழுப்பினார்களோ, அவர்களைக் குறிப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலடியாக இந்தக் காட்சியை விஜய் தரப்பே வெளியிட்டதா அல்லது எப்படி வெளியானது என்பது விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago