படத்தை விமர்சிப்பதில் குறைந்தபட்ச நியாயம் வேண்டும்: இயக்குநர் ராம்நாத் நேர்காணல்

By கா.இசக்கி முத்து

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தைத் தொடர்ந்து, ஜீவா, நயன்தாரா நடிக்கும் ‘திருநாள்’ படத்தை இயக்கிவருகிறார் ராம்நாத். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘திருநாள்’ படத்தின் கதைக்களம் என்ன?

எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். சிறுவயதில் இருந்தே நான் பார்த்த விஷயங்கள், சம்பவங்கள் தான் இப்படம். கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களைச் சுற்றிய கதைக்களம். எந்த ஒரு தப்பான ஆரம்பமும், சரியான முடிவைத் தராது என்பதை கும்பகோணத்தில் இருக்கும் ஒரு ரவுடியின் வாழ்க்கைப் பின்னணியில் சொல்லியிருக்கிறேன்.

ஜீவா, நயன்தாரா என்று பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி உள்ளது?

‘ஈ’ படத்துக்கு பிறகு ஒரு லோக்கல் கதாபாத் திரத்தில் ஜீவா பண்ணியிருக்கும் படம் இது. கதையைக் கேட்டதுமே இதில் நடிக்க ஜீவா சம்மதித் தார். இது வழக்கமான ஹீரோயிஸ கதையாக இல் லாமல் ஒரு பாத்திரத்தின் வாழ்வியலைச் சொல்லும் படமாக இருக்கும். ஜீவாவுக்கு வசனங்கள் குறைவு. ஆனால் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம். அவர் இதை சிறப்பாக செய்திருக்கிறார்.

அதுபோல, ‘ஐயா’ படத்தில் பார்த்த நயன்தாராவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். மிகவும் குடும்பப் பாங்கான, துறுதுறுவென்ற பாத்திரம் அவருக்கு. அவரது காதல் காட்சிகளும் புதிதாக இருக்கும். 65 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறேன்.

உங்களது முந்தைய படமான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ போல இதிலும் காமெடி தூக்கலாக இருக்குமா?

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ சீரியஸான படம்தான். அதில் எங்கெல்லாம் சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் காமெடியை சேர்த்திருப்பேன். இப்படத்தில் முனீஸ்காந்த் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் கதைக்குள் காமெடி இருக்கும். மற்றபடி இது காமெடி படம் இல்லை.

நீங்கள் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றினீர்கள்?

‘பாண்டி’ படத்தில் ராசு மதுரவன் அண்ணனிடம் இருந்தேன். அதற்கு முன்பாக ஜனநாதன் சாரிடம் ‘ஈ’, ‘பேராண்மை’ உட்பட பல படங்களின் கதை விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ‘திண்டுக்கல் சாரதி’ படத்துக்கு வசனம் எழுதினேன்.

குறும்படங்களை இயக்கி அதன்மூலம் வெள்ளித் திரைக்கு இயக்குநர்கள் அறிமுகமாகும் காலக்கட்டம் இது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

சினிமா என்பது மாஸ் மீடியா. இங்கு யாருக்கும் யாரும் உதாரணம் கிடையாது. இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் யாரிடமும் பணியாற்றாமல் நேரடி யாக படம் இயக்க வந்ததாக கேள்விப்பட்டிருக் கிறேன். அவர் எடுத்த அத்தனை படங்களும் வெற்றி கரமாக ஓடின. ஒருவர் எந்த அளவுக்கு சினி மாவை உள்வாங்கி இருக்கிறார் என்பதைப் பொறுத்துதான் அவரது படங்கள் வெற்றியடையும். நேரடியாக இயக்க வருபவர்களைவிட உதவி இயக் குநர்களாக இருந்தவர்கள், படப்பிடிப்பில் சந்திக் கும் பிரச்சினைகளை எளிதாக சமாளித்துவிடுவார் கள். அது ஒன்றுதான் வித்தியாசம்.

சமூக வலைதள விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

விமர்சனங்களுக்கு உட்பட்டதுதான் சினிமா. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், காழ்ப்பு உணர்ச்சியோடு வரும் விமர்சனங்கள் தவிர்க்கப்படலாம் என்பது என் கருத்து. ஒரு படத்தைப் பார்க்காமலேயே அதுபற்றி கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். விமர்சனங்களில் குறைந்தபட்ச நியாயம் இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கண்மூடித்தனமாக ஒரு படத்தைக் காயப்படுத்துவது தவறு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்