ஓடிடியில் வெளியான படங்கள், பொங்கல் விடுமுறைக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன.
கரோனா ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு, பல்வேறு படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டதால், திரையரங்க உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இப்போது கூட சூர்யா குடும்பத்தின் படங்களைத் திரையிடமாட்டோம் என முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஓடிடியில் வெளியான பல படங்கள் பொங்கலுக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் சன் டிவியில் பொங்கல் அன்று ஒளிபரப்பாகவுள்ளது. ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற படம் என்பதால், கண்டிப்பாக டி.ஆர்.பியில் முன்னிலை பெறும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிடிஹெச் முறையில் ஜீ ப்ளக்ஸ் தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட 'க/பெ ரணசிங்கம்' திரைப்படம் பொங்கல் அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல் சந்தானம் நடித்த 'பிஸ்கோத்' படத்தையும் ஒளிபரப்பவுள்ளனர்.
» 'கே.ஜி.எஃப் 2' கதாபாத்திரம் சக்தி வாய்ந்தது; சிக்கலானதும் கூட: ரவீனா டண்டன்
» திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு அனுமதி வேண்டும்: அமித் ஷாவுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago