சென்னையில் 'டி43' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

'அத்ரங்கி ரே' இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் தனுஷ். தமிழில் செல்வராகவன், கார்த்திக் நரேன், ராம்குமார், மித்ரன் ஜவஹர் உள்ளிட்ட பலருடைய படங்களில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் முதலில் கார்த்திக் நரேன் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டார் தனுஷ்.

இன்று (ஜனவரி 8) முதல் சென்னையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கு சமயத்திலேயே பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார்.

தற்போது படத்தின் முதல் பாடல், படப்பிடிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமைத்த ஜானி நடனமைக்கிறார். இதனைப் பாடலாசிரியர் விவேக் எழுத தனுஷ் பாடியுள்ளார்.

தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்