'சூது கவ்வும் 2' படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூது கவ்வும்'. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு 'சூது கவ்வும் 2' எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்துகொண்டே இருந்தது. தற்போது அதன் கதையை இறுதி செய்து படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
'சூது கவ்வும் 2' படத்தை 'யங் மங் சங்' படத்தின் இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. 'சூது கவ்வும்' படத்தைத் தயாரித்த சி.வி.குமாரே 2-ம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளார்.
» 'மாஸ்டர்' வில்லன்: விஜய் சேதுபதிக்கு முன்பு ஆலோசனையில் இருந்த இரு நடிகர்கள்
» 4 வயதுச் சிறுமியின் பிறந்த நாள் வாழ்த்தைப் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்
இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. அவருடன் காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இதன் கதைக்களத்தை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago