'மாஸ்டர்' படத்தில் வில்லனாக, விஜய் சேதுபதிக்கு முன்னதாக நடிக்க இரண்டு நடிகர்களை மனதில் வைத்துப் படக்குழு ஆலோசித்தது தற்போது தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித் குமார் வாங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய் - விஜய் சேதுபதி இருவருமே இணைந்து நடித்துள்ள முதல் படமாக 'மாஸ்டர்' படம் அமைந்துள்ளது. இந்த வில்லன் கதாபாத்திரத்துக்குத்தான் நீண்ட நாட்களாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இருந்தது.
அந்தச் சமயத்தில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவரோ தேதிகள் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து நானியிடம் பேசலாம் என்றும் ஆலோசனையில் இருந்தனர். அப்போதுதான் விஜய் சேதுபதி குறித்த பேச்சு எழுந்துள்ளது. அவரும் நடிக்கச் சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்துள்ளார்.
» 4 வயதுச் சிறுமியின் பிறந்த நாள் வாழ்த்தைப் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்
» அஜித்துடன் ஆடி மகிழ்ந்த புத்தாண்டு: நடனக் கலைஞர் மிக்கி நெகிழ்ச்சி
இதனை 'மாஸ்டர்' படத்தின் திரைக்கதையில் உதவி புரிந்துள்ள ரத்னகுமார், ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago