கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லுக் டெஸ்ட் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்துக்காகத் தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். தனுஷுக்கு தங்கையாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago