தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆனந்திக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளது.
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அந்தப் படத்துக்குப் பிறகு பலரும் 'கயல்' ஆனந்தி என்றே அவரை அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து 'சண்டி வீரன்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'விசாரணை', 'ரூபாய்', 'என் ஆளோட செருப்பக் காணோம்', 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் தான் நாயகியாக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர் ரக்ஷிதா. தமிழுக்காக ஆனந்தி என்று பெயர் மாற்றினார். தமிழில் 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'ஏஞ்சல்', 'இராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனந்தி.
முன்னணி நாயகியாக வலம் வரும் நிலையில், திடீரென்று ஆனந்தி திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். இன்று (ஜனவரி 7) இரவு 8 மணியளவில் சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளது.
வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால் ஆனந்திக்கு நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago