மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘சார்லி’. இப்படம் தற்போது ‘மாறா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரும் ஜன. 8ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. புதியவரான திலீப் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் இந்த டிரெய்லரை குறிப்பிட்டு மாதவனை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் அமித் சாத் மாதவனுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதை பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
அமித் சாத்தின் புகைப்படத்தில் பின்னூட்டமிருந்த ட்விட்டர் பயனர் ஒருவர், ‘ஒரு காலத்தின் மாதவன் எனது இதயம் கவர்ந்த நடிகராக இருந்தார். ஆனால் இப்போது அவர் தன்னுடைய அற்புதமான சினிமா வாழ்க்கை, ஆரோக்கியம், வாழ்க்கை ஆகியவற்றை மது மற்றும் போதைப் பழக்கத்தால் அழித்துக் கொள்வதை பார்க்க நெருடலாக உள்ளது. பாலிவுட்டில் அவர் நுழைந்த போது புதிதாக மலர்ந்த மலரைப் போல இருந்தார், ஆனால் இப்போது அவரது கண்களையும், முகத்தையும் பாருங்கள். அவை அனைத்தையும் சொல்லும்’ என்று கூறியிருந்தார்.
அந்த பயனரை மாதவனின் ரசிகர்கள் பலரும் கடுமையாக பின்னூட்டத்தில் சாடினர். அவரது கருத்துக்கு பதிலளித்த மாதவன், ‘ஓ.. இவற்றையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்தீர்களா? உங்கள் பெற்றோரை நினைத்து நான் கவலை கொள்கிறேன். நீங்கள் மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago