'தி லிஃப்ட் பாய்' படத்தை ரீமேக் செய்வதாக வெளியான செய்திக்கு வசந்தபாலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், விரைவில் வெளியாகவுள்ளது.
'ஜெயில்' படத்தைத் தொடர்ந்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்தார். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை வசந்தபாலன் - அர்ஜுன் தாஸ் இருவருமே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், சில தினங்களாக 'தி லிஃப்ட் பாய்' படத்தின் தமிழ் ரீமேக் பணிகளைத்தான் இயக்குநர் வசந்தபாலன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. பலருமே அதன் கதையைப் படித்துவிட்டு, நிஜமாக இருக்குமோ எனக் கருதி செய்திகளை வெளியிட்டு வந்தனர். ஆனால், இதற்கு வசந்தபாலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், "பல முக்கியமான இணையதளங்களில் நான் இந்தியில் வெளியான ‘தி லிஃப்ட் பாய்’ திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறான தகவல்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் அர்ஜுன் தாஸ் குறித்து எதுவும் சொல்லவில்லை என்பதால், வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளது உறுதியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago