நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். அவருக்கான ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது.
நடன இயக்குநராக இருந்த சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமானார். 3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:33மணிக்கு வெளியிட்டார். காலப் பயணம் சார்ந்த திகில் படம் என்று 3:33 விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சதீஷ் மனோஹரன் பணியாற்றுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ளது. மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவுன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago