'விக்ரம்' படத்தில் கமலுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தான் அடுத்து இயக்கவுள்ள படத்துக்குத் தயாராகி வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு 'விக்ரம்' எனத் தலைப்பிடப்பட்டு, அறிமுக டீஸரும் வெளியிடப்பட்டது.
கடந்த சில தினங்களாக கமலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் ஃபகத் பாசிலை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால், தேதிகள் இல்லாமல் அவர் விலகிவிட்டார்.
தற்போது, முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் பேசியிருப்பது உறுதியாகியுள்ளது. அவரும் கமல் படம் என்பதால், தன்னுடைய இதர படங்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, தேதிகள் கொடுத்துள்ளார் என்கிறார்கள். ஆகையால் 'காதலா காதலா' படத்துக்குப் பிறகு மீண்டும் கமல் - பிரபுதேவா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஃபகத் பாசில் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில்தான் பிரபுதேவா நடிக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். 'விக்ரம்' படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago