முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள 'புலிக்குத்தி பாண்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
தற்போது, இந்தப் படத்துக்கு 'புலிக்குத்தி பாண்டி' எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்குப் படக்குழுவினருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படம் முதலில் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு என்று திட்டமிட்டு இருந்தனர்.
பின்பு ஜனவரி 1-ம் தேதி திரையரங்கில் வெளியிட்டுவிட்டு, 15-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு என முடிவு செய்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் தாமதத்தால் பொங்கலுக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு 'நாங்க ரொம்ப பிஸி' படமும் இதே பாணியில் தயாரித்து ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
» தெலுங்கு நடிகர் வருண் தேஜுக்கு கரோனா
» பாதுகாப்பு, அன்பு, வரவேற்பை உணர்கிறேன்: மும்பைக்குத் திரும்பிய கங்கணா பகிர்வு
'புலிக்குத்தி பாண்டி' படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ரகுநந்தன், சண்டை இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago