எதையும் விட உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம் என்று ரஜினி அறிவிப்பு தொடர்பாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஜினி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார். இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
"குருவே, நீங்கள் எடுத்த முடிவு 100 சதவீதம் சரி. எதையும் விட உங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம். உங்களை நம்பியவர்களுக்காக நீங்கள் தன்னலமின்றி ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே மற்றவர்களுக்காக அக்கறை காட்டுபவர். அதுதான் உங்களை மிக உயர்ந்த மனிதராக மாற்றுகிறது. என்றும் உங்கள் நல் ஆரோக்கியத்துக்கு ராகவேந்திரரைப் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்".
» எதில் விருப்பம்; இயக்கவா? நடிக்கவா? - பாடகர் சித் ஸ்ரீராம் பதில்
» நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா: கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago