நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வந்த 'ஹே சினாமிகா' படப்பிடிப்பு நிறைவடைந்தது.
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. இந்தப் படத்தின் பூஜை மார்ச் மாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'ஹே சினாமிகா' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.
'ஹே சினாமிகா' படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் தங்களுடைய சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஹே சினாமிகா' படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
» பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் அறை இருந்ததற்கான சுவடே இல்லை: வழக்கறிஞர் குற்றச்சாட்டு
» விஜய் போன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும்: திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள்
ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago