திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப 'சினம்' படக்குழு திட்டம்

By செய்திப்பிரிவு

திரைப்பட விழாக்களுக்கு தங்களுடைய படத்தை அனுப்ப 'சினம்' படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பல்லக் லால்வாணி, காளி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சினம்'. இந்தப் படத்தில் பாரி வெங்கட் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அருண் விஜய்.

ஷபீர் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமாரே தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் கதையும் வழக்கமானது இல்லை என்பதால், திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காகத் திரைப்பட விழாக்களுக்கு என்றே தனியாக ஒரு எடிட் செய்துள்ளது படக்குழு. மேலும், ஜனவரியிலிருந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்