இயக்குநராக அறிமுகமாகும் பிரபல தயாரிப்பாளர்

By செய்திப்பிரிவு

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

'சுட்ட கதை', 'நளனும் நந்தினியும்', 'நட்புன்னா என்னானு தெரியுமா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். தற்போது சாந்தனு, அதுல்யா ரவி நடித்து வரும் 'முருங்கைகாய் சிப்ஸ்' என்னும் படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் 'கூர்கா' மற்றும் 'சங்கத்தமிழன்' ஆகிய படங்களை வெளியிட்டார்.

தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன். இதன் பூஜை நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சரவண ப்ரியன் மற்றும் சிவ துரை இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ப்ரியா மாலி, ஆடை வடிவமைப்பாளாராக ஹினா, எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக நர்மதா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஒளிப்பதிவாளருக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது.

ஜனவரியில் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்