ஆரி நடிப்பில் உருவாகும் 'பகவான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
தற்போது நடைபெற்று வரும் 'பிக் பாஸ்' 4-ல் போட்டியாளராக இருக்கிறார் நடிகர் ஆரி. அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என ஒரே சேர சமூக வலைதளத்தில் எதிரொலித்து வருகிறது. இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆரி திரும்பியவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. தற்போது இந்தப் படத்துக்கு 'பகவான்' என்று பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
» ரஜினி மருத்துவமனையில் அனுமதி: ரத்த அழுத்தப் பிரச்சினை எதிரொலி
» முத்தையா - விக்ரம் பிரபு பட வெளியீட்டில் மாற்றம்: சன் பிக்சர்ஸ் முடிவு
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக முருகன் சரவணன், எடிட்டராக அதுல் விஜய், இசையமைப்பாளராக பிரசன் பாலா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago