'தலைவி' படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று (டிசம்பர் 24) எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது படக்குழு. இதற்கு இணையத்தில் உண்மைக்கு மிக நெருக்கத்தில் வடிவமைத்துள்ளனர் என்று பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமி இருக்கும்போது, அவருக்கு அருகில் கண்ணாடியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமுத்திரக்கனி.
» தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ்: 'மாஸ்டர்' வெளியீட்டில் படக்குழு மும்முரம்
» விரும்பாதவர்கள் சொன்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டுள்ளேன்: விக்னேஷ் சிவன்
இது தொடர்பாக விசாரித்தபோது, எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பதை உறுதி செய்தது படக்குழு. இதற்காக ஆர்.எம்.வீரப்பன் மாதிரியே நடப்பது, பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சமுத்திரக்கனி நடித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
'தலைவி' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவை முடிந்தவுடன் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago