'முஃப்தி' தமிழ் ரீமேக்கின் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.
கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'முஃப்தி'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டன.
ஞானவேல்ராஜா தயாரித்து வந்த இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். 'முஃப்தி' இயக்குநரே தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட சில விஷங்களால் இயக்குநர் நரதன் விலகிவிட்டார்.
இதனால், 'முஃப்தி' ரீமேக் பணிகள் பாதிக்கப்பட்டன. யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இடையே, சிம்பு வேறு முழுமையாக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். ஆனால், 'முஃப்தி' தமிழ் ரீமேக் படப்பிடிப்பின் போது குண்டாக இருந்தார். இதனால் 'முஃப்தி' தமிழ் ரீமேக் குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.
» ‘சூஃபியும் சுஜாதாயும்’ இயக்குநர் ஷாநவாஸ் கவலைக்கிடம்
» மதுரை பள்ளிக்கு உதவி: நடிகை கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் வேண்டுகோள்
தற்போது, 'முஃப்தி' தமிழ் ரீமேக் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ளார். நாளை (டிசம்பர் 24) படத்தின் தலைப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. விரைவில் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு அனைத்தையும் முடித்து, படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago