'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக்; சுவாரசியப் பின்னணி: ஆண்ட்ரியா பகிர்வு

By செய்திப்பிரிவு

'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டதன் சுவாரசியப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள படம் 'பிசாசு 2'. ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். நேற்று (டிசம்பர் 21) ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மிஷ்கின்.

2015-ம் ஆண்டு ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பாட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை அப்படியே 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக உருவாக்கி இருந்தது படக்குழு. இது எதார்த்தமாக நடைபெற்றதா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது.

இது தொடர்பான சுவாரசியப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.

தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

" 'பிசாசு 2' முதல் பார்வை போஸ்டருக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இடது பக்கம் இருப்பது எனது அம்மாவின் அம்மா / பாட்டியின் புகைப்படம். அவர் சின்னப் பெண்ணாக இருக்கும்போது எடுத்த புகைப்படம். அவரது பெயர் ஹெதர். நல்ல பொன்னிறத் தலை முடியும், சாம்பலும் நீலமும் கலந்த நிறத்தில் கண்களும் கொண்டவர். அவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் போலவே தோன்றவில்லை.

மிஷ்கின் என்னிடம் 'பிசாசு 2' கதையைச் சொன்னபோது நான் உடனடியாக அந்தக் கதாபாத்திரத்தோடு எனது வம்சாவளியை ஒப்பிட்டுப் பார்த்தேன். பழைய புகைப்படங்களைத் தேடிப் பிடித்து அவருக்கு அனுப்பினேன். இந்தப் புகைப்படங்கள் அமானுஷ்யமாகவும் அழகாகவும் இருப்பதாகவும், படத்தில் எனது கதாபாத்திரத்தின் தோற்றத்தை இதை வைத்து உருவாக்கி முதல் பார்வை போஸ்டரை வடிவமைக்க விரும்புவதாகவும் சொன்னார். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்.

நான் 'பிசாசு 2' குறித்து பதற்றமாகத்தான் இருந்தேன். ஆனால், கடைசியில் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது எனக்குள் அமைதியை உணர்ந்தேன். ஏனென்றால் அந்தக் கதாபாத்திரத்தை நான் தேடிப் பிடித்துவிட்டதாக உணர்கிறேன். இந்தத் தோற்றத்தை இவ்வளவு அழகாகக் கொண்டுவந்த குழுவுக்கு மிக்க நன்றி".

இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்