சமூக வலைதளத்தில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம் ஆகியோரின் மகன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் வாரிசுகளுக்கு இடையேயான நட்பு என்பது மிகவும் அரிதுதான். சமூக வலைதளத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டாலும், நேரில் நட்பு பாராட்டுவது என்பது ரொம்பவே குறைவு. அப்படி நேரில் நட்பு பாராட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஆகியோர் ஒன்றாக நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அப்போது மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இணையத்தில் பேசுபொருளாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இருவருமே மிகவும் பரிச்சயம். முதன்முறையாக இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் புகைப்படம் இதன் மூலமே வெளியாகியுள்ளது. இதில் அர்ஜித் ஷங்கர் முழுமையாகத் தனது முகத்தை வெளிக்காட்டவில்லை.
» சோனு சூட்டுக்குப் புகழாரம் சூட்டிய சிரஞ்சீவி
» ரன்பீர் கபூர் - சந்தீப் ரெட்டி வாங்கா திரைப்படத்தின் தலைப்பு மாற்றம்
ஏ.ஆர்.ரஹ்மான் - ஷங்கர் - விக்ரம் மூவருமே நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார்கள். தற்போது அவர்களுடைய வாரிசுகளுக்குள்ளும் நட்பு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago