இது ஒரு கவுரவம்: 'அசுரன்' தேர்வுக்கு தனுஷ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'அசுரன்' தேர்வாகியிருப்பதற்கு தனுஷ் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் சேர்த்து இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும்.

இந்த ஆண்டு கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம், வெகுஜன திரைப்படப் பிரிவில் திரையிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேன்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

'அசுரன்' மற்றும் 'தேன்' ஆகிய படக்குழுவினருக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தான் நடித்த 'அசுரன்' படம் தேர்வாகி இருப்பது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"IFFI 2020 இந்தியப் பிரிவில் 'அசுரன்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எங்கள் அனைவருக்கும் இது ஒரு கவுரவம். மக்களுக்கான ஒரு படத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி".

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியில் 'அந்தரங்கி ரே' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்