பொங்கல் வெளியீடு: 'மாஸ்டர்' Vs 'ஈஸ்வரன்' உறுதி

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்துடன் 'ஈஸ்வரன்' போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஓடிடி வெளியீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காத காரணத்தால், 'மாஸ்டர்' படத்துக்கு முன்னுரிமை அளிக்கத் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாகும் எனக் கணித்துள்ளனர். இந்த முக்கியத்துவத்தால், 'ஈஸ்வரன்', 'சுல்தான்' உள்ளிட்ட படங்கள் பின்வாங்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், 'ஈஸ்வரன்' பின்வாங்கவில்லை.

தற்போது 'ஈஸ்வரன்' படத்தின் தமிழகத் திரையரங்க உரிமையை 7ஜி சிவா வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' வெளியாவதால், ஜனவரி 14-ம் தேதி 'ஈஸ்வரன்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை என்பதால், இந்த வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் 'ஈஸ்வரன்' படக்குழு தீர்மானமாக உள்ளது. 'சுல்தான்' உள்ளிட்ட இதர படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்