'மாநாடு' படத்தைத் தொடர்ந்து, ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. புதுச்சேரியில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கிவிட்டு, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இன்னும் 30% காட்சிகள் எடுக்க வேண்டும்.
'மாநாடு' படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. இயக்குநர் ராம் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு. ஆகையால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை விரைவில் நல்லபடியாக முடிந்து, விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 'மாநாடு' படத்தை முடித்துவிட்டு, 'முஃப்தி' ரீமேக்கின் இதர காட்சிகளை முடித்துக் கொடுக்கவுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து ராம் படத்துக்குத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago