ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ்: பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு ரசிகர்களும், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக 'தி க்ரே மேன்' என்கிற திரைப்படம் உருவாகிறது. இதில் ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை ஹாலிவுட் செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான இந்தத் தகவலை சிறிது நேரத்தில் நெட்ஃபிளிக்ஸும் உறுதி செய்தது. வியாழக்கிழமை இரவு முதலே தனுஷுக்கு இணையதளத்தில் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்தன. வெள்ளிக்கிழமை மாலை தனுஷின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டானது.

இதில் திரையுலகில் தனுஷின் நண்பர்கள் பலரது வாழ்த்துகளும் அடக்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்