சித்ரா போலவே போட்டோ ஷூட்: வைரலாகும் புகைப்படங்கள்

By செய்திப்பிரிவு

சித்ரா போலவே கீர்த்தனா தினகர் எடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இதில் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அதில் நடித்து வந்த சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (டிசம்பர் 17) காலை ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை நடத்தினார். அது தொடர்பான விவரங்கள் இனிமேல் தான் வெளியாகும்.

இதனிடையே சித்ராவைப் போலவே உடையணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார் கீர்த்தினா தினகர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சித்ரா போலவே போட்டோ ஷூட் செய்ததின் பின்னணி குறித்து கீர்த்தனா தினகர தனது பதிவில் கூறியிருப்பதாவது:

"இவ்வளவு வருடங்கள், நான் எங்குச் சென்றாலும், என்னைப் பார்த்துப் பலரும் சொன்ன விஷயம், நீங்கள் சித்து/முல்லை/சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகையைப் போல இருக்கிறீர்கள்' என்பதுதான். உண்மையில் அப்படி ஒரு கருத்தைக் கேட்க எனக்குச் சந்தோஷமாகவே இருக்காது.

ஏனென்றால் நமக்குள் உருவ ஒற்றுமை கிடையாது, நான் அசலாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இப்போது அதே கருத்தைச் சொன்னால் எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் என்னால் ஒருவரைச் சந்தோஷப்படுத்த முடிகிறது என்ற காரணத்தினால்.

அவர் மறைந்த தருணத்திலிருந்து, அந்த அணியைத் தொடர்பு கொள், அந்தக் கதாபாத்திரத்தத் தேர்வுக்குச் சென்று வா, கண்டிப்பாக உன்னைத் தேர்வு செய்வார்கள் என்றெல்லாம் எனக்குச் செய்திகளும் அழைப்புகள் என் நண்பர்களிடமிருந்து, தெரிந்தவர்களிடமிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

முதல் முறை அதைக் கேட்ட போது கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்துச் சிரித்து ஒதுக்கிவிட்டேன். ஆனால் இப்போது வரை அதே போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

முல்லை/சித்துவுக்கு மாற்றே கிடையாது. நமக்கு அவரை மிகவும் பிடிக்கும். இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக யார் நடிப்பார்கள் என்பதை இறுதி செய்திருப்பார்கள். நாங்கள் இந்த ஃபோட்டோ ஷூட்டை எடுத்தது சித்ராவுக்கு மரியாதையும், அன்பும் செலுத்தும் விதமாகத்தான்.

எங்களைப் போலவே சித்ராவை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்"

இவ்வாறு கீர்த்தனா தினகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்