'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அப்டேட்: சித்ராவுக்குப் பதிலாக ஒப்பந்தமான நடிகை

By செய்திப்பிரிவு

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் சித்ராவுக்குப் பதிலாக காவ்யா அறிவுமணி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இதில் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அதில் நடித்து வந்த சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டிசம்பர் 8-ம் தேதி சித்ராவுடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சித்ராவின் மரணத்துக்குப் பிறகு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது தொடர்பாகப் பலருடைய பெயர்கள் பரீசிலிக்கப்பட்டன. இறுதியாக காவ்யா அறிவுமணி ஒப்பந்தமாகி நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான 'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் காவ்யா அறிவுமணி. இவரை வைத்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் சித்ராவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்