இதுவரை சுதா இயக்கத்திலேயே மிகச்சிறந்த படம் - ‘தங்கம்’ குறித்து மாதவன் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

இதுவரை சுதா கொங்கரா இயக்கத்திலேயே மிகச்சிறந்த படம் ‘தங்கம்’ என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகவுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒவ்வொரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகப்பட்ட கதைகளாகும். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வரவேறபை பெற்றது.

இதில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள கதையின் பெயர் ‘தங்கம்’. இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பவானி ஸ்ரீ உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்த்த நடிகர் மாதவன் கூறியுள்ளதாவது:

இதுவரை சுதா கொங்கரா இயக்கத்திலேயே மிகச்சிறந்த படம் ‘தங்கம்’ தான். இப்படம் எனக்கு நிறைவை கொடுத்தது. எளிய கதையை கொண்ட இப்படம் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. இதை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சாத்தியப்படுத்தியதில் மகிழ்ச்சி.

இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் மேற்கத்திய இசையிலிருந்து எந்தவித தடையுமின்றி கிராமப்புற இசைக்கு மாறியது தான். இதைத்தான் நான் காண விரும்பினேன்.

இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்