முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஜனனி பதிலளித்துள்ளார்.
டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் சித்ராவுக்கு பதிலாக வேறு யார் நடிக்கவுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இது தொடர்பாக பலருடைய பெயர்கள் அடிபட்டு வருகிறது.
தற்போது சில தொடரில் நடித்து வரும் ஜனனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு வீடியோ வடிவில் பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் "'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் சித்ராவின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால். உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு ஜனனி கூறியிருப்பதாவது:
» சிவன் கோவில் பூசாரிக்கு வீடு கட்ட உதவிய ஃபர்ஹான் அக்தர்
» பிப்ரவரியில் படப்பிடிப்பு; ஆகஸ்டில் வெளியீடு: வேகமெடுக்கும் ஹரி - அருண் விஜய் கூட்டணி
"முல்லை கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதன் ரசிகையாக முல்லை கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த இடத்தில் யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சித்ரா வந்து முல்லையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை யாருமே நிரப்ப முடியாது"
இவ்வாறு ஜனனி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago