ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சாமி ஸ்கொயர்' படத்துக்குப் பிறகு, ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 'அருவா' படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹரி. இதன் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. ஆனால், சூர்யா - ஹரி இருவருக்கும் இடையேயான மனக்கசப்பால் இந்தப் படம் தள்ளிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படத்தை ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய அடுத்த தயாரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அருண் விஜய் நடிப்பில் அதிகப் பொருட்செலவில் தயாராகும் படமாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 6 மாதத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்து, வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தற்போது அருண் விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago