ட்விட்டர் தளத்தில் இடம்பிடித்த டாப் 10 படங்கள், நடிகர்கள், நடிகைகள் பட்டியல்: 'மாஸ்டர்', மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் சாதனை

By செய்திப்பிரிவு

ட்விட்டர் தளத்தில் 'மாஸ்டர்' திரைப்படம் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2020-ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் இந்த ஆண்டு திரையுலகில் சாதனை புரிந்த ஹேஷ்டேகுகள், பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை அறிவித்து வருகிறது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.

சில தினங்களுக்கு முன்பு, 2020-ம் ஆண்டு வெளியான படங்களின் ஹேஷ்டேகில் #SooraraiPottru திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்தது. தற்போது ஒட்டுமொத்தமாக வெளியாகாத மற்றும் வெளியான படங்களின் சாதனைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதை ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகப் படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது #Master. ஏப்ரலில் வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல முறை ஓடிடி வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் முதல் 10 இடங்களை #Master, #VakeelSaab, #Valimai, #SarkaruVaariPaata, #SooraraiPottru, #RRR, #Pushpa, #SarileruNeekevvaru, #KGFChapter2 மற்றும் #Darbar ஆகிய ஹேஷ்டேகுகள் பிடித்துள்ளன.

நடிகர்கள் - நடிகைகள் பட்டியல்

2020-ம் ஆண்டு ஒருவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, அதிகப்படியான ட்வீட்கள் செய்யப்பட்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.

அதன்படி தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவரைத் தொடர்ந்து பவன் கல்யாண், விஜய், ஜூனியர் என்.டி.ஆர், சூர்யா, அல்லு அர்ஜுன், ராம்சரண், தனுஷ், மோகன்லால் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, டாப்ஸி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதி ஹாசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். #MasterTopsTwitter2020 என்ற ஹேஷ்டேகில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்