ஜனவரியில் தொடங்கும் ஹரி - அருண் விஜய் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

'சாமி ஸ்கொயர்' படத்துக்குப் பிறகு, ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 'அருவா' படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹரி. இதன் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. ஆனால், சூர்யா - ஹரி இருவருக்கும் இடையேயான மனக்கசப்பால் இந்தப் படம் தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படத்தை ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை அருண் விஜய் ஃபோட்டோ ஷூட் படங்களும் உறுதிப்படுத்தின. ஹரி - அருண் விஜய் இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.

தற்போது ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக அருண் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படப்பிடிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து ஹரி படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்