ஒரே ஷாட்டில் தயாராகும் விமல் படம்

By செய்திப்பிரிவு

ஒரே ஷாட்டில் தயாராகவுள்ள திகில் படம் ஒன்றில் விமல் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கழுகு- 2’ படத்தைத் தயாரித்த மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹாரர் படமாக உருவாகவுள்ள இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படவுள்ளதாகப் படக்குழுவினர் அறித்துள்ளனர்.

‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ என்ற படத்தை இயக்கிய வீரா இப்படத்தை இயக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்குத் தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குநர் வீரா. இதனால் அவருக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை சிங்காரவடிவேலன் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்