இளன் - ஹரிஷ் கல்யாண் இணையும் ஸ்டார்

By செய்திப்பிரிவு

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள படத்துக்கு 'ஸ்டார்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் வெளியான படம் 'பியார் பிரேமா காதல்'. கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இணைந்து தயாரித்த இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்துக்குப் பிறகு இளன் இயக்கத்தில் உருவாகும் படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமானார். யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, இளன் - ஹரிஷ் கல்யாண் - யுவன் கூட்டணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். 'ஸ்டார்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனென்றால், 'தளபதி' படத்தின் ரஜினி கெட்டப் போலவே இதன் ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மதியம் 12 மணி, 12 நிமிடம், 50 விநாடிகளின்போது வெளியிடப்பட்டது. ஏனென்றால் 12-12-1950 அன்றுதான் ரஜினி பிறந்தார் என்பதால் இந்த நேரத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, மும்பை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்