ரஜினி பிறந்த நாள்: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். ஆனால், ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார் ரஜினி.

நேற்று (டிசம்பர் 11) மாலையில் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமரிசையாகக் கொண்டாடினார்கள். அவருடைய பிறந்த நாளுக்கென்று பிரத்யேக போஸ்டர் ஒன்றை உருவாக்கி சுமார் 70 பிரபலங்கள் கொண்டு வெளியிட்டனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரையுலகப் பிரபலங்களும் அடங்கும்.

இன்று (டிசம்பர் 12) காலை முதலே ரஜினியுடன் நடித்த திரையுலகப் பிரபலங்கள் அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்