'அந்தாதூன்' ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் சிம்ரன்

By செய்திப்பிரிவு

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றித் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். பிரசாந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்காக உடல் எடையைக் குறைத்து, பியானோ இசைக்க பயிற்சி பெற்று வருகிறார்.

தற்போது பிரசாந்த்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தபு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகப் பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இறுதியாக, சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே 'கண்ணெதிரே தோன்றினாள்', 'ஜோடி', 'தமிழ்' மற்றும் 'பார்த்தேன் ரசித்தேன்' ஆகிய படங்களில் பிரசாந்த் - சிம்ரன் ஜோடி இணைந்து நடித்துள்ளது. இப்படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பு பெற்றவை. அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்கள் கழித்து பிரசாந்த்துடன் இணைந்து நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்