கூகுள் தேடலில் சாதனை புரிந்த சூரரைப் போற்று

By செய்திப்பிரிவு

கூகுள் தேடலில் பெரும் சாதனை புரிந்துள்ளது 'சூரரைப் போற்று' திரைப்படம்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. நவம்பர் 12-ம் தேதி வெளியான அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்கள், விமர்சகர்கள் எனப் பலரும் படக்குழுவினரைப் பாராட்டினார்கள்.

இந்நிலையில், 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயர் சமூக வலைதளத்தில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட படங்களின் பெயர்களில் #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் #DilBechara என்ற ஹேஷ்டேக் இருக்கிறது.

அதேபோல், 2020-ம் ஆண்டு கூகுள் தேடல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்படப்பட்ட படங்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது 'சூரரைப் போற்று'. மேலும், இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்தியப் படம் 'சூரரைப் போற்று' மட்டுமே. மீதமுள்ள 9 படங்களுமே இந்திப் படங்கள்தான்.

'சூரரைப் போற்று' படத்தின் இந்தச் சாதனையால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தற்போது 'நவரசா' ஆந்தலாஜியில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்