மிகவும் நம்பிக்கை தந்த திறமையான ஒரு கலைஞர் சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று சித்ரா மறைவு குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்ரா தற்கொலை தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» சித்ராவின் இழப்பைக் கண்டிப்பாக அதிகம் உணர்வோம்: அஞ்சனா
» பல பெண்களுக்கு நீங்கள் ஊக்கமாக இருந்தீர்கள்: சித்ரா மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் இரங்கல்
"நடிகை சித்ராவின் மரணம் பற்றிக் கேட்டு பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். மிகவும் நம்பிக்கை தந்த, திறமையான ஒரு கலைஞர் சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். முன்பை விட இப்போது இன்னும் வலிமையுடன் இதை நாம் ஒரு சமூகமாக வலியுறுத்த வேண்டும்".
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago