'லாபம்' திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடா?- விஜய் சேதுபதி விளக்கம்

By செய்திப்பிரிவு

'லாபம்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து, படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என்கிற சந்தேகத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'லாபம்'. டி.இமான் இசையமைக்க, ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட படத்தின் வேலைகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் படத்தில் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியிருப்பதாக உறுதியான செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து 'லாபம்' திரையரங்கில் வெளியாகாது என்றும், விஜய் சேதுபதியின் முந்தைய படமான க.பெ.ரணசிங்கத்தைப் போலவே ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்றும் ஒரு சிலர் பகிர ஆரம்பித்தனர்.

ஆனால், இதில் உண்மையில்லை என்று படத்தின் நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விஜய் சேதுபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, "சமூக அரசியல் த்ரில்லர் படமான 'லாபம்' நேரடியாக ஓடிடியில் வெளியாகாது. பிரம்மாண்டத் திரையரங்க வெளியீடாகவே இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பட வெளியீடைச் சுற்றியிருந்த சந்தேகம் தீர்ந்தது.

கரோனா நெருக்கடி காரணமாக 6 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் 'சூரரைப் போற்று', 'பெண்குயின்', 'பொன்மகள் வந்தாள்' உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக ஆரம்பித்தன. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், வெளியான படங்களைப் பார்க்கப் பெரிதாகக் கூட்டம் சேரவில்லை.

இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை ஓடிடியில் வெளியிட்டு லாபம் பார்ப்பதே சிறந்த யோசனையாக இருக்கும் எனப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் சேதுபதியின் முந்தைய படமும் ஓடிடியில் வெளியானதாலேயே 'லாபம்' திரைப்படத்தைச் சுற்றி அப்படியொரு வதந்தி பரவியதாகத் தெரிகிறது.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இந்தப் படத்தில் உணவு அரசியல் உள்ளிட்ட புரட்சிகரமான விஷயங்களும் 'லாபம்' படத்தில் பேசப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்