'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு வில்லனாகும் ஃபகத் பாசில்?

By செய்திப்பிரிவு

கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தின் வில்லனாக ஃபகத் பாசிலை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தின் பணிகளைக் கவனித்து வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படமாகும்.

'விக்ரம்' படத்தைப் பொறுத்தவரையில், இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கமலுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' மற்றும் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களில் மட்டுமே ஃபகத் பாசில் நடித்துள்ளார். முழுக்க மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அவரை கமலுக்கு வில்லனாக நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. பல்வேறு மலையாள படங்களில் நாயகனாக நடித்து வருவதால், படப்பிடிப்புக்கான தேதி விவரங்கள் முடிவானவுடன் தான் ஃபகத் பாசில் நடிப்பாரா என்பது தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்