ஜனவரிக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, 2021 கோடை விடுமுறைக்கு வெளியிட 'வலிமை' படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளின்போது அஜித்துக்குக் காயம் ஏற்பட்டது. ஆனாலும், அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகே சென்னை திரும்பியது படக்குழு.
தற்போது, இதுவரை படமாக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளின் எடிட்டிங் பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு. இன்னும் எடுக்க வேண்டிய காட்சிகளையும் பட்டியலிட்டு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார்கள். இதையும் ஹைதராபாத்திலேயே நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் ஹைதராபாத்துக்குப் பயணிக்கவுள்ளனர். இதனை ஒரே கட்டமாக ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
அடுத்த 3 மாதங்களில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக் கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஒருபுறம் படப்பிடிப்பு, மறுபுறம் இறுதிக்கட்டப் பணிகள் எனத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago