கடின உழைப்பு ஊக்கமளிக்கிறது: ஆர்யாவுக்கு விஷால் வாழ்த்து

By செய்திப்பிரிவு

'சார்பட்டா பரம்பரை' படத்துக்காக ஆர்யாவின் உழைப்பை விஷால் பாராட்டியுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சார்பட்டா பரம்பரை'. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (டிசம்பர் 2) படக்குழு வெளியிட்டது.

இப்படத்துக்காக முழுமையாக உடலமைப்பை மாற்றி நடித்துள்ளார் ஆர்யா. அந்த மாற்றம் நேற்றைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிந்தது. இதனால், சமூக வலைதளத்தில் படக்குழுவினருக்கும், ஆர்யாவுக்கும் பாராட்டுகள் குவிந்தன. சூர்யா தொடங்கி பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வியப்புடன் ட்வீட் செய்திருந்ததைக் காண முடிந்தது.

'சார்பட்டா பரம்பரை' படத்தை முடித்துவிட்டு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் 'அரண்மனை 3' மற்றும் விஷாலுடன் 'எனிமி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா.

'சார்பட்டா பரம்பரை' படத்துக்காக ஆர்யாவின் உழைப்பு தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என் அன்பான எனிமி டார்லிங் ஜாமி. உன் கடின உழைப்பு எனக்கு ஊக்கமளிக்கிறது. உன் உடலமைப்பில் பாதியாவது எனக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆர்யா மற்றும் ரஞ்சித் இருவரும் கலக்கப் போகின்றனர். இப்படத்துக்காகக் காத்திருக்கிறேன்".

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷாலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆர்யா, "மிக்க நன்றி எனிமி டார்லிங்... எப்போதும் நீ என்னை விட 10 படிகள் முன்னே இருக்கிறாய்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவரையும் 'எனிமி' படத்தில் இயக்கி வரும் ஆனந்த் ஷங்கர், இப்படிப்பட்ட நட்பைத்தான் நான் எதிரிகளாகக் காட்டப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்