வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பாரதிராஜா - சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. சூரி படம், தனுஷ் படம், 'வாடிவாசல்' எனப் பல செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார் வெற்றிமாறன்.
இந்தப் படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் திட்டமிட்டுள்ளார். ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 8-ம் தேதி முதல் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பவுள்ளது படக்குழு. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
» வலிமையான பெண்களின் கதைகளால் ஊக்கம் பெறுகிறேன்: வித்யா பாலன்
» உருவாகும் மற்றுமொரு தயாரிப்பாளர் சங்கம்: தயாரிப்பாளர்களுக்குள் ஏற்படாத ஒற்றுமை
சூரி படத்தை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான பணிகளை வெற்றிமாறன் தொடங்குவார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago