தமிழ்த் திரையுலகில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாகவுள்ளது. தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாததின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் எப்போதுமே ஒற்றுமையே இல்லாமல் இருக்கும் சங்கமாக தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தால் எப்போதுமே ஒரு சர்ச்சை உருவாகும். பல்வேறு முன்னணித் தயாரிப்பாளர்கள் இந்தச் சர்ச்சையைப் பேசித் தீர்க்க முயற்சி செய்தபோது தோல்வியில்தான் முடிந்தது. இதனால் தற்போது படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள், அவர்களுடைய சமீபத்திய பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள். இந்தச் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் டி.ஆர். தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் களத்தில் நின்றன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார்கள் என்ற சர்ச்சைகளை எல்லாம் தாண்டி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணி வெற்றி பெற்றது. தமிழக அரசு நியமித்த அதிகாரியின் கீழ் செயல்பட்டு வந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு, இன்று (டிசம்பர் 2) தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதிவேற்றுக் கொள்ளவுள்ளனர்.
» பா.இரஞ்சித் - ஆர்யா இணையும் 'சார்பட்டா பரம்பரை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» யாஹூவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியல்: சுஷாந்த் முதலிடம்; மோடிக்கு 2-வது இடம்
இந்நிலையில், டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகச் சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சங்கம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
ஒட்டுமொத்தமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் சுமார் 1,303 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள். இவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இதுவரை இருந்ததில்லை. இதனாலேயே ஒவ்வொரு புதிய சங்கமாக உருவாகிக் கொண்டே இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாத வரையில் எத்தனை சங்கங்கள் உருவானாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதே தமிழ் சினிமா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago