ஹாலிவுட் படங்களில் மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர் சாட்விக் போஸ்மேன். மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். 2016-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ப்ளாக் பேந்தராக முதன்முதலில் தலைகாட்டினார் போஸ்மேன்.
2017-ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீளப் படத்தைத் தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் ப்ளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.
இந்தச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால், தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி சாட்விக் போஸ்மேன் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.
» ‘பேட்மேன்’ படத்தில் மோசமாக நடித்திருந்தேன் - ஜார்ஜ் க்ளூனி வெளிப்படை
» இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு காலத்தின் கட்டாயம்: நடிகர் சதீஷ்
இந்நிலையில் சாட்விக் போஸ்மேனுக்காக புதிய டைட்டில் கிரெடிட்ஸ் ஒன்றை மார்வெல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வழக்கமாக மார்வெல் படங்களின் தொடக்கத்தில் வரும் இந்த டைட்டில் கிரெடிட்ஸின் மார்வெல் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் இடம்பெறும். ஆனால் தற்போது இதில் முழுக்க முழுக்க சாட்விக் போஸ்மேனின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது மார்வெல் நிறுவனம்.
இதே போல மார்வெல் நிறுவனத்தின் பிதாமகனான ஸ்டான் லீ மறைவின் போது ‘கேப்டன் மார்வெல்’ திரைப்படத்தின் டைட்டில் கிரெடிட்ஸில் ஸ்டான் லீ படங்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago