'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்?

By செய்திப்பிரிவு

'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'ராதே ஷ்யாம்' படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் 'ஆதிபுருஷ்' ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ். இதில் 'ஆதிபுருஷ்' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற் போல் நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலிகான் நடிக்கவுள்ளார்.

இக்கதையை ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கவுள்ளார். இதில் சீதையாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. எதுவுமே அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை என்பதால், தற்போது கீர்த்தி சனோனைப் படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாகப் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்குப் படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், இந்தச் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. பிரபாஸ் - கீர்த்தி சனோன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் 'ஆதிபுருஷ்' வெளியாகவுள்ளது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்